அரசியல்கட்டுரைகள்

முதல் தழல் ஈகி அப்துல் இரவூப்!

தமிழ்நாட்டின் முதல் தழல் ஈகி மாணவர் அப்துல் இரவூப் நினைவு நாள் இன்று!

  • 15-12-1995 அன்று அப்துல் ரவூப் என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத்தானே தீக்கிரையாக்கி  இறந்தான். இறப்பதற்கு முன்பு ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டாள் ஆயிரம் ஆயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள் என்று கூறினார்.
  • அரசு மருத்துவமனையில் உடல் முழுவதும் எந்த நிலையில் இருந்த அப்துல் ரவூப்’யிடம் காவல்துறையினர் தம்பி நீ எந்த கட்சி என்றனர்?
  • அதற்கு கட்சிகள் பெயரை சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள் முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்காகதான் தீக்குளித்தேன் என்று இறுதி வாக்குமூலம் கொடுத்தார் அப்துல் ரவூப்.
  • அப்துல் ரவூப்பை காண வந்தவரிடம் ‘என்னை காப்பாற்றாதீர்கள் ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள்’ என்று உருக்கமாகப் பேசி மறைந்தார் .
  • அப்துல் ரவூப் மூட்டிய தீ இன்னும் தமிழர்கள் நெஞ்சில் அணையா நெருப்பாக எரிந்து கொண்டுதான் இருக்கிறது.முதல் தழல் ஈகி மாணவர் அப்துல் இரவூப் நினைவு நாள் இன்று!

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button