ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டு வழக்கில் சிக்கிய நபர்ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டு வழக்கில் சிக்கிய நபர்
ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டர் தரை இறக்கியதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டர் தரை இறக்கியதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கனடா நாட்டில் இச்சம்பவம் அரங்கேறியது. டிஸ்டேல் நகரில் சுமார் 3000 மக்கள் தொகை வசிக்கிறார்கள். அப்பகுதியில் ஹெலிகாப்டர் செல்கையில், 34 வயதானா பைலட் , பெயர் குறிப்பிட விரும்பவில்லை, நடுவானில் பறந்து கொண்டி இருக்கும் போது ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என தோன்றியது. அந்த சமயத்தில் அவர் நடுவானில் இருந்து எந்த வித முன்னறிவிப்பும் இன்று நகரின் மைய பகுதியில் ஹெலிகாப்டர் தரை இறக்கி இருக்கிறார். இது அப்பகுதி மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நாட்டில் சிவப்பு நிற ஹெலிகாப்டர் என்றால் அது அவசர மருத்துவ உதவிக்காக பயன்படுத்த படும். இந்த நடுவானில் இருந்து நகரின் மைய பகுதியில் தரை இறக்கிய ஹெலிகாப்டரும், சிவப்பு நிறத்தில் இருந்ததால், அப்பகுதி மக்கள் ஏதோ அவசர மருத்துவ சிகிச்சைக்காக தரை இறக்கப்பட்டுள்ளது என நினைத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர்.
இது குறித்து போலீசார் , நடத்திய விசாரணையில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என தோன்றியது அதனால் தான் ஹெலிகாப்டர் தரை இறக்கினேன் என அவர் பதிலளித்துள்ளார். அவர்க்கு எங்கு வேண்டுமானாலும் தரை இறக்குவதற்கு அனுமதி அளிக்க பட்ட போதிலும், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, நகரின் மையத்தில் இறக்கியது, பார்க்கின் இல்லாத இடத்தில் தரை இறக்கியது சட்டப்படி குற்றம் என அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுமேலும் இது
மேலும் இது தொடர்பான வழக்கு செப்டம்பர் 7 தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இச்சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன தான் இருந்தாலும் ஐஸ் கிரீம் சாப்பிட ஆசைபட்டு இப்படி கேஸ்ல மாட்டிகிட்டது எல்லாம் டூ மச்