கொரோனா தடுப்பூசி போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை அனைவர்க்கும் வழங்குகிறதா?
அனைவர்க்கும் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறதா என ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொரோனா பெருந்தொற்று வராமல் தடுக்க தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்தாலும், இப்போது தடுப்பூசி அறிமுக முகப்படுத்த பட்டுள்ளது. இது அனைவர்க்கும் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறதா என ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது முற்றிலும் புதிய வகை வைரஸ் என்பதால் இது பற்றிய ஆய்வுகள் தொடந்து நடைபெற்று வருகிறது. இப்போதுஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் ஆக்ஸ்போர்டு /அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசிகள் வெவ்வேறு நோய்கள் இருக்கும் மக்களிடையே எப்படி செயலாற்றுகின்றன என்பது தொடர்பாக இங்கிலாந்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஏதேனும் நோய் எதிர்ப்பு சக்தி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி போதுமான நோய் எதிப்பு ஆண்டிபாடிகளை வழங்க வில்லை என ஆய்வு கூறியுள்ளது.
கொரோனா நோய் தொற்று ஆனது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தான் பரவும், மேலும் இது நோய் தொற்று இருப்பவர்களிடம் இருந்து, இன்னொரு நபருக்கு காற்றின் மூலம் இந்த நோய் பரவுகிறது. இது பரவுவதை தடுப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், இது பரவாமல் தடுக்கலாம். மேலும் இப்போது அனைவருக்கு தடுப்பூசி இரண்டு முறை அளிக்க பட்டு வரும் நிலையில், அனைவர்க்கும் இது போதுமான ஆண்டிபாடிகள் கொடுப்பதில்லை என கண்டறிந்து இருக்கின்றனர். இரண்டு குழுவாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஏற்கனவே நாட்பட்ட நோய்களினால்
பாதிக்கப்பட்டவர்கள், இன்னொரு குழு ஏற்கனவே நோயெதிப்பு சக்தி குறைவாக இருப்பதால் நோய்க்கு ஆளானவர்கள் என இரு குழுவாக பிரித்து, இரண்டு குழுவில் இருப்பவர்களுக்கு இரண்டு முறை தடுப்பூசி அளிக்க பட்டது. இதில் முதல் குழுவில் இருப்பவர்கள் போதுமான ஆண்டிபாடிகள் கிடைத்ததாகவும் , இரண்டாவது குழு, அவர்களுக்கு போதுமான ஆண்டிபாடிகள் கிடைக்க வில்லை , குறைவாக இருந்ததாகவும் ஆய்வு முடிவு கூறியது.
ஏற்கனவே நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும் என கண்டறிந்து உள்ளனர். இவர்களுக்கு இந்த மருந்துகள் முழுமையாக பயன்படுவது கேள்வி குறியாக தான் இருக்கிறது. இது பற்றி ஆய்வுகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.