Site icon ழகரம்

தமிழகத்தில் இன்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று…..!

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 28,47,589. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,08,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,21,725.

சென்னையில் 7,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 10,562 பேருக்குத் தொற்று உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 88,959.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 5,80,09,172.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,54,935.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 28,47,589.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 17,934.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,484.

* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 41359.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 16,62,809 பேர். பெண்கள் 11,84,742 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 10,652 பேர். பெண்கள் 7,372 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,039 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 27,21,725 பேர்.

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 19 பேர் உயிரிழந்தனர். 7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,905 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8697 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மாநிலம் முழுவதும் 37953 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 21735 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9302 ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு; இன்றைய நிலவரம்:

* மொத்த பாதிப்பு: 185.

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 179.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version