Site icon ழகரம்

தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறதா?

நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ஆ.ராசா, அனைத்து மாநிலங்களும் ஒன்றே என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒன்றுமை வேண்டுமெனில் இந்தி கற்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார்.தந்தை பெரியார் இறக்கும் வரை தனிநாடு கோரினார்.  ஆனால், நாங்கள் நாட்டின் ஒற்றுமையையும் மக்களாட்சியையும் கருத்தில் கொண்டு அக்கோரிக்கைக்கு புறம்பாக இருக்கிறோம் என பேசினார்.மேலும் எங்களையும் அந்த நிலையை நகர்த்த முயற்சிக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.அதனால் மாநில சுயாட்சியை வழங்குங்கள் என்று கூறியுள்ளார். ஆ. ராஜாவின் இந்த பேச்சு மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது.

நேற்று தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆ.ராஜாவின் பேச்சை மிக கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர்தமிழ்நாட்டை தனியாக கேட்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்றும் தனித்தமிழ்நாடு கேட்கும் நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்போம் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே பிரித்து விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆ.ராஜாவின் இந்த பேச்சை வட இந்திய ஊடகங்கள் மிக பெரும் சர்ச்சையாக மாற்றியது.குறிப்பாக முன்னாள் சட்ட அமைச்சரும்,பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமி,தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்த போது ஆ. ராஜா அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.மேலும் அவர் ஆ.ராஜா அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.அவரின் இந்த கருத்து தவறான ஒன்று காரணம் ஆ.ராஜா அவர்கள் 2ஜி வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.ஆ.ராஜா அவர்கள் தனி நாடு கேட்கிறார் என்று நாம் பார்க்க முடியாது.அவர் மாநில சுயாட்சி கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்த கருத்தை கூறியுள்ளார். ஆ.ராஜா கருத்தை தேச பிரிவினையை உண்டாக்க கூடிய கருத்து என்று கூறுபவர்கள் இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவோம்,இந்து ராஷ்ட்ரம் அமைப்போம்,அகண்ட பாரதம் போன்ற கருத்துக்கள் தேச பிரிவினையை உண்டாக்க கூடிய கருத்தில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.

மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் போக மாநிலங்களை பிரிப்பது சாத்தியமா என்று கேட்டால்,இந்திய அரசியலமைப்புபடி சாத்தியமான ஒன்று தான்.இதற்கு முன்னர் பல உதாரணங்கள் கடந்த 2000-ம் ஆண்டில் பீகாரிலிருந்து ஜார்கண்ட் பிரிந்தது.மத்திய பிரதேசத்திலிருந்து  உத்தரகாண்ட் பிரிந்தது.கடந்த 2013-ல் ஆந்திராவிலிருந்து தெலங்கானா என்ற மாநிலம் உருவானது.மிக சமீபத்திய உதாரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து  பாராளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு.அரசியலமைப்பு பிரிவு 370-ஐ நீக்கி.மாநிலத்தை இரண்டாக உடைத்து,மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.இந்த பின்னணியில் பார்க்கும் போது மாநிலத்தை பிரிப்பது சாத்தியமான ஒன்று தான். அனால் அவ்வளவு எளிதல்ல என்று எதிர் கட்சியினர் கூறுகின்றனர்.மாநிலங்களை பிரிப்பதில் நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளன என்ற எதிர்கட்சிகளின் வாதத்தை புறந்தள்ள முடியாது.

அப்படியெனில் மாநிலங்களை பிரிப்பது சாத்தியம் என்று கூற காரணம் ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் தான்.நயினார் நாகேந்திரன் மட்டுமல்ல கர்நாடக மாநில அமைச்சரும் இந்தியாவில் ஐம்பது மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.பல்வேறு பா.ஜ.க தலைவர்கள் இதே கருத்தை தான் பிரதிபலிக்கின்றனர்.தற்போது கட்டப்படும் புதிய நாடாளுமன்றத்தில் இத்தனை மாநிலங்களிலிருந்து  வர கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  ஒதுக்கீடு செய்யும் வகையில் கட்டபடுகிறது என்ற ஒரு கருத்தோட்டமும் நிலவுகிறது.

தமிழ்நாடும் அது போன்று பிரிக்க பட வாய்ப்புள்ளதா என்றால்,அதனை முற்றும் முழுவதும் நிராகரிக்க முடியாது என்றாலும்.அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.தமிழ்நாட்டின் அரசியல் சூழலும் சமூக சூழலும் அதற்கு இடமளிக்காது.தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்று பேசியவர்கள் தாங்கள் சொன்ன கருத்தை பின்வாங்கியும் இருகிறார்கள்.சமீபத்திய உதாரணம் திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்,மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு நாடு மாநிலம் என்ற மாநிலம் அமைய வேண்டும் என்று இங்குள்ள வலதுசாரிகள் பேசினார்கள் .தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கும் எல்.முருகன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொங்கு நாடு என்று பதிவிட்டு பின்வாங்கினார்.

அதே நேரத்தில் மாநில பிரிப்பு நடக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது.இந்த மாதம் 2,3 ஆகிய தேதிகளில் தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு பா.ஜ.க தான் இந்த நாட்டை ஆளும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.அதற்கான நடவடிக்கைகளில் பா.ஜ.க ஈடுபடுகிறது என்பது கண்கூடான உண்மை.இதை எதிர்கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ள போகிறது? என்பது தான் பிரதான கேள்வியாக உள்ளது.

இது போன்ற தமிழ்நாட்டை பிரிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு மக்கள் பெரும்பாலானவர்கள் விரும்பமாட்டார்கள் என்பது உண்மை.இதனை தடுப்பதற்கு  ஆளும் கட்சியான திமுகவிற்கு மிக பெரிய பொறுப்பு உண்டு.சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற பெட்னா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக பேசினார்.அவர் பேசும் போது முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டார்.தமிழ்நாட்டில் அனைவரது மத நம்பிக்கைகளும் பாதுகாக்கப்படும் என்றார்.அவர் சொல்லியதை செயலில் நிரூபித்தால்.தமிழ்நாட்டில் உள்ள சமூக நல்லிணக்கம் மேலும் வலுபெறும்.தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்று சொல்பவர்களின் வாதம் முறியடிக்கப்படும்

 

Exit mobile version