கொரோனா – எந்த தடுப்பூசி புதிய வகை வைரஸ்கள் வராமல் தடுக்கிறது.
இந்த டெல்டா பிளஸ் மாறுபாட்டிற்கு எதிராக கோவாக்ஸின் தடுப்பூசி சிறப்பாக எதிர் வினை புரிகிறது என ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றி கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையாக இந்த வைரஸ் உருமாறி கொண்டு இருக்கையில், இந்தியாவில் இது டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆக உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த டெல்டா பிளஸ் மாறுபாட்டிற்கு எதிராக கோவாக்ஸின் தடுப்பூசி சிறப்பாக எதிர் வினை புரிகிறது என ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த கோவாக்ஸின் தடுப்பூசியானது, இந்தியாவில் தயாரிக்க பட்ட முதல் தடுப்பூசியாகும். பாரத் பயோடெக் என்ற நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்.ம் இணைந்து இந்த தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்.
தற்போது இந்தியாவில் மூன்று வகையான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படுகிறது. அதில் கோவாக்ஸின் , கோவிஷில்ட் , ஸ்புட்னிக் ஆகிய மூன்றில் இரண்டு கோவாக்ஸின் , கோவிஷில்ட் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் ஆனது முற்றிலும் புதிய வைரஸ் என்பதால் இதை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தடுப்பூசி பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் எந்த தடுப்பூசி மாறுபட்ட கொரோனா தொற்றில் இருந்து அதிகம் பாதுகாப்பு அளிக்கிறது என நடத்திய ஆய்வில் கோவாக்ஸின் தடுப்பூசி தான் வீரியமாக செயல்படுகிறது என கண்டு பிடித்து உள்ளனர். கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் இருந்தால் அவர்களுக்கு நோயின் தீவிரத்தில் 77.8% தடுக்கிறது என்றும், மேலும் டெல்டா வகை கொரோனா என்றால் 65.2% தடுக்கிறது எனவும் ஜூலை மாதம் கூறப்பட்டது.
கோவாக்ஸின் சிறப்பாக செயல்படும் என்ற போதிலும், உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து அவசர கால அனுமதியை பெறவில்லை. பாரத் பயோடெக் நிறுவனம், இதற்கு விண்ணப்பித்து இருக்கிறது. அனுமதி கிடைத்தபின் இந்த தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படலாம். அனுமதி கிடைக்காததால், இப்போது 15- 16 நாடுகள் தான் இந்த கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் 50 நாடுகள் இது குறித்து பரிசீலித்து வருகின்றது.