உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங். இவர் உச்ச நீதிமன்ற பார் சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், கரோனா தொற்று எண்ணிக்கை குறைவதால் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முழு வீச்சில் நேரடி விசாரணைகளைத் தொடங்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு பதிலளித்தஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “ஒமைக்ரான் ஒரு சைலன்ட் கில்லர். எனக்கு கரோனா முதல் அலையின்போதும் தொற்று ஏற்பட்டது. ஆனால் அப்போது 4 நாட்களில் குணமடைந்துவிட்டேன். இந்த முறை 25 நாட்களைக் கடந்தும் நான் இன்னும் வருந்திக் கொண்டு இருக்கிறேன். இன்று 15,000-க்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது” என்றார்.