நமக்கு தெரிய நபர்கள் வாட்ஸாப் குழுவில் நம்மை இணைக்காமல் தடுக்க புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் மிக பெரிய தகவல் பரிமாற்ற தளமாக வாட்ஸாப் செயல்பட்டு வருகிறது. இதில் நண்பர்கள், உறவினர்கள், மேலும் அலுவலக தகவல்கள் , பள்ளி ஆன்லைன் வகுப்பு லிங்க் என அனைத்து தகவலைகளும் இந்த வாட்ஸாப் வழியாக தான் பரவி வருகிறது. தனி நபர், அல்லது குழுவாக தகவல்கள் பகிர பட்டு வரும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு குழு, அலுவலக நண்பர்களுக்கு ஒரு குழு, பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், என தனி தனி குழுவாக இருப்பார்கள். இந்த ஊரடங்கு நாட்களில், அனைவரும் அவர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டு இருந் நிலையில், நமக்கு தெரியாத, நபர்கள் அவர்களின் பொருள்களை விற்பதற்கு நம்மை சேர்த்து வாட்ஸாப்ப் குழுவில் சேர்த்து விடுகின்றனர். இதை தவிர்க்க வாட்ஸாப்ப் செட்டிங் மாற்றி கொள்ளலாம்.
தெரியாத நபர்கள் நம்மை குழுவில் சேர்க்காமல் இந்த மாற்றத்தை செய்யுங்கள்
setting ல் நுழைந்து account ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் பிரைவசி என்பதை கிளிக் செய்தால் அதில் குரூப் என்று இருக்கும்.
அதனை கிளிக் செய்து உள்ளே நுழையும் போது ,Everyone, my contacts, my concepts except என்று இருக்கும்.
இதில் Everyone என்பது யார் வேண்டுமானாலும் நம்மை குழுவில் இணைக்கலாம் என்று அனுமதி தருவது.
my contacts என்பது நமது எண் வைத்து இருக்கும் நபர்கள் மட்டும் குழுவில் இணைக்க அனுமதி தருவது.
my concepts except இது ஒருவர் எண் மொபைல் காண்டக்ட்டில் இருந்தாலும், அவர் எந்த குழுவிலும் நம்மை சேர்க்க வேண்டாம் என நினைத்தால் அவரது எண்ணை மட்டும் தேர்வு செய்து கொள்வது.
இந்த setting மாற்றி வைத்து கொள்ளுங்கள். இதனால் தேவையில்லாத குழுவில் நீங்கள் சேருவது தவிர்க்கப்படும்.