உங்கள் பட்ஜெட்க்குள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டுமா?
ஸ்மார்ட் வாட்ச் என்றாலே பெரும் பணக்காரர்கள் வாங்கி பயன்படுத்தும் ஒன்றாக அனைவரும் நினைத்து வந்தார்கள்
ஸ்மார்ட் வாட்ச் என்றாலே பெரும் பணக்காரர்கள் வாங்கி பயன்படுத்தும் ஒன்றாக அனைவரும் நினைத்து வந்தார்கள். முன்னணி நிறுவனங்கள் அதிக விலையுடன் ஸ்மார்ட் வாட்ச்கள் மட்டும் மார்க்கெட்களில் கிடைத்தது. இப்போது அந்த நிலை மாறி உள்ளது. இப்போது நிறைய நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களம் இறங்கி உள்ளது. இதனால் விளையும் குறைவாக உள்ளது. 5000 ரூபாய்க்கு எல்லாம் ஸ்மார்ட் வாட்ச் வாங்க முடியும்.
ரியல்மி, சியோமி உள்ளிட்ட நிறுவனங்கள்ரூ.10,000-க்கு பல்வேறு சிறப்பம்சங்களுடன் தங்களது ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுக படுத்தி உள்ளது. ரூ.5,000 கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா (Noise ColorFit Ultra): இந்த வாட்ச் ரூ.4,999 விலையில், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 1.75 இன்ச் 2.5D கர்வுடு கிளாஸ் புரொடெக்ஷன் உடன்,மென்மையான சிலிக்கான் பட்டைகளுடன், இணைக்கப்பட்ட அலுமினிய அலாய் மூலம், தயாரிக்க பட்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச் ஹார்ட் ரேட் சென்சார், ரத்த ஆக்ஸிஜன் அளவு போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இது வாட்டர் ப்ரூப் உடன் வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.
போட் எக்ஸ்டெண்ட் ஸ்மார்ட்வாட்ச் – ரூ.2,999 விலைக்கு நேர்த்தியான மற்றும் கவர்ச்சியான ஸ்மார்ட் வாட்ச் வேண்டும் என்றால் இதை வாங்கலாம். ஹார்ட் ரேட் சென்சார், ரத்த ஆக்ஸிஜன் மானிட்டர், பெரிய ஸ்கிரீன் உடன் வாட்டர் ப்ரூப் வசதியுடன் வருகிறது.
இது போன்று குறைந்த விலையில் நிறைய தரமான வாட்ச்கள் வருகிறது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் வாட்ச்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. உங்கள் குறைந்த பட்ஜெட்டிற்கு ஏற்ப நீங்களும் இது போன்ற வாட்ச்களை வாங்கி பயன்படுத்தலாம்.