இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள் ?
இரவில் நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
இரவில் நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
நமது உடல் சுற்று சூழலுக்கு தகுந்தாற் போல் வேலை செய்யும். அதாவது வெளிச்சமாக இருக்கும் நேரங்களில், சுறுசுறுப்பாக இயங்கவும், இருட்டான இடங்களில் தூங்குவதற்கு தகுந்த மாதிரி இயற்கை வடிவமைத்து உள்ளது. அதனால் தான் இரவில் தூங்கி பகலில் வேலை செய்ய உடல் பழக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் இரவில் வேலை செய்து பகலில் தூங்கி உடலுக்கு பல்வேறு நோய்களை வரவழைத்து விடுகின்றோம்.
இரவில் தூங்குவதற்கு உடலில் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்பதால் உடல் தசைகள் ஓய்வாக இருக்கும். நாள் முழுவதும் வேலை செய்து உடல் அசதியாக இருக்கும். அதனால் இரவில் தூங்கி அடுத்த நாள் காலை எழுவது உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவவும்.
ஆனால் இரவில் விளக்குகளை அனைத்து விட்டு நீண்ட நேரம் வேலை ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது, மூளைக்கு இன்னும் இருட்டாக வில்லை, வெளிச்சமாக இருக்கிறது , நாம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற சிக்னலை அனுப்புகிறது. அதனால் மூளை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கும். ஆனால் அடுத்த நாள் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் நாம் மூளையை நீண்ட நேரம் ஏமாற்றி வெளிச்சமாக வைத்து தூங்காமல் வைத்து இருப்பது தான் காரணம்
இப்படி இருட்டில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால், தூக்கம் சார்ந்த நோய்கள் வருகிறது. தூக்கமின்மை, உடல் சோர்வு, மனஅழுத்தம், மன சோர்வு போன்ற பிரச்சனைகள் வருகிறது. மேலும் இருட்டில் ஸ்மார்ட் போனில் இருக்கும் LED திரை பார்ப்பதால் பார்வை குறைபாடு பிரச்சனைகள் வருகிறது. இது கண்களில் இருக்கும் ரெட்டினா எனும் பகுதியை பாதிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இது போன்ற வாழ்வியல் முறை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும். மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம்.
இது உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்படுத்துவதற்கு, படுத்து கொண்டு நீண்ட நேரம் கைகளை மடக்கி ஸ்மார்ட் போன் கைகளில் வைத்து இருப்பதால், கழுத்து வலி, மேலும் தசை பிடிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.