எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் பராமரிப்பு வேலைகள் காரணமாக ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாது என தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது..
பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் மொபைல் பரிவர்த்தனை செய்பவராக இருந்தால் இன்று மற்றும் நாளை பரிவர்த்தனை செய்வதில் பிரச்னை இருக்கும். அனைத்து மொபைல் தளங்களும், பராமரிப்பு பணி மேற்கொள்ள இருக்கிறது. ஆகஸ்ட் 6 , 7 தேதிகளில் சிறிது நேரம் ஆன்லைன் வங்கி சேவைகள் மூடப்படுகிறது.இந்த நேரத்தில், வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ (SBI Yono), எஸ்பிஐ யோனோ லைட் (SBI Yono Lite) மற்றும் யோனோ பிசினஸ் மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எதையும் பயன்படுத்த முடியாது. இதனால் பணத்தை அனுப்பவோ, வாங்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
ஆகஸ்ட் 6 ம் தேதி 22.45 மணி முதல் ஆகஸ்ட் 7 ம் தேதி 01.15 மணி வரை இந்த நேரத்தில் எந்த டிஜிட்டல் தளமும் இயங்காது என அறிவுறுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் எங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறியுள்ளது. இந்த இரண்டு நாட்களில் 150 நிமிடங்கள் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.
இது போன்ற பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறுகிறது. இது முதல் முறை அல்ல. உங்களுக்காக எங்களது சேவைகளை சிறப்பாக தர முயற்சிக்கு ஒத்துழைப்பு தொடர்ந்து தாருங்கள் என கூறியுள்ளது.