ஜியோ ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்கிறது.
ஜியோ நிறுவனம் அடுத்த கட்டமாக தனது ஸ்மார்ட் போனை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்கிறது
ஜியோ நிறுவனம் அடுத்த கட்டமாக தனது ஸ்மார்ட் போனை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்து ஸ்மார்ட் போன் வர்த்தகத்தில் கால் பதிக்க உள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் 44வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தனது ஆன்ட்ராய்டு போனை தயாரிக்கிறது. இதற்கு ’ஜியோஃபோன் நெக்ஸ்ட்’ என்று பெயரிட்டுள்ளது. இந்த ஜியோஃபோன் நெக்ஸ்ட்டின் Android 11 (Go Edition) ஆபரேடிங் சிஸ்டம் தேர்வு செய்ய பட்டுள்ளது. மேலும் இதில் HD+ Display வசதி, பின்புறம் இருக்கும் கேமரா 5 MP , முன் இருக்கும் செல்பி கேமரா 2MP வசதி, 3000 mAh பேட்டரி வசதியும் கொண்டுள்ளது. இதன் விலை தோராயமாக 4999 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் பகிர பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, அவர்கள் கூறுகையில், ஸ்மார்ட் போன் அறிமுகம் படுத்தவும், தொடக்க நிலை பயன்பாட்டுக்காக குறைந்த விலையில் 4G சேவையில் அறிமுகம் செய்ய படுகிறது என கூறியுள்ளார். இது குறித்த இணைய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. XDA Developers தனது ட்விட்டர் பக்கத்தில் போன் குறித்த ட்விட் செய்துள்ளது.
இந்த போனை குறித்து பல்வேறு தகவல்கள் எதிர்பார்க்க படுகிறது, மிகவும் குறைந்த விலையில் , செப்டெம்பர் 10 தேதி மார்க்கெட்டில் விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்க படுகிறது. இணையத்தில் பகிரப்பட்டு தகவல் அனைத்தும் எதிர்பார்ப்பின் அடைப்படையில் பகிரப்பட்டது. இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எந்த தகவலையும் அதிகார பூர்வமாக அறிவிக்க வில்லை