தொழிநுட்பம்

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிய செயலியை இந்தியா கண்டுபிடிப்பு

நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள உத்தரகாண்ட் மாநில ஐஐடி மாணவர்கள் புதிய செயலியை கண்டுபிடித்து உள்ளனர்.

நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள உத்தரகாண்ட் மாநில ஐஐடி மாணவர்கள் புதிய செயலியை கண்டுபிடித்து உள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கி ஐ.ஐ.டி. நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுக படுத்தி உள்ளது. இதை அம்மாநிலத்தின் முதலமைச்சர், புஷ்கர்சிங் தாமி அவர்கள் அறிமுக படுத்தினார். இந்த செயலி இரண்டு முறைகளில் வடிவமைக்கபட்டது. ஆன்ட்ராய்டு மொபைல், மற்றும்  ஐஓஎஸ்  தளங்களில் இது செயல்படும் வகையில் இது வடிவமைக்க பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்கு தேவையான உதவிகளை அனைத்தையும் உத்தரகாண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்து தந்தது. இந்த மொபைல் செயலியானது, நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே நமக்கு அலெர்ட் செய்யும். நாமும் பாதுகாப்பாக இருப்பதற்கு தயார் ஆகி கொள்ளலாம். நிலநடுக்கத்தை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களையும், இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். நிலநடுக்கம் எங்கே ஆரம்பிக்கும், எந்த விதமான அதிர்வுகளை ஏற்படுத்தும், எந்த இடத்தில் அதிகமாக இருக்கும் என பல்வேறு தகவல்களை இது நமக்கு காட்டும்.

இது போன்ற பல்வேறு தகவல்களுடன் இந்த செயலி வடிவமைக்க பட்டுள்ளது. இது குறித்து ரூர்கி ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித் கே. சதுர்வேதி கூறுகையில்,  இந்த நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் செயலியை கண்டுபிடித்ததில் மிகவும் பெருமை அடைகிறேன்.  இந்த செயலி மூலம், நிலநடுக்கம் வருவதை உத்தேச நேரத்துடன் தெரிந்து கொள்ள உதவும். இது மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும். மேலும், உயிரிழப்பை தடுக்க முடியும். என அவர் கூறியுள்ளார்.

இந்த செயலியை டேராடூனில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி  அறிமுகம் செய்து வைத்து அதற்கு  ‘உத்தரகாண்ட் பூகம்ப் அலர்ட்’ என பெயர் சூட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button