
திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் இன்று (பிப்.15) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள், சமூக வலைதளங்களில் வெளியாகி செய்யாறு, போளூர் மற்றும் வந்தவாசி பகுதியில் வசிக்கும் மாணவர்களிடையே கடந்த வாரம் பகிரப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத் துறை இணை இயக்குநர் ஆய்வு செய்துள்ளார்.இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், இன்று (15-ம் தேதி) பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், 5 மாதங்களில் பணி நிறைவு பெற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (முழு கூடுதல் பொறுப்பு) விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.