ஆன்மீகம்செய்திகள்

இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாட்டம்…!!

தஞ்சை பெருவுடையார் கோயில் விழாக்கோலம்...

இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்பட உள்ள நிலையில், தஞ்சை பெருவுடையார் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது!

இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா

  • ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் ராஜராஜ சோழனின் ஐப்பசி சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டு விழாவுக்கு கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது.
    இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா
  • சங்க காலத்தின் மூன்று பேரரசுகளில் ஒன்றான சோழ பேரரசு காலத்தில் கட்டப்பட்டதுதான் தஞ்சை பெரிய கோயில். கிபி 1003 முதல் 1010 வரை கட்டப்பட்ட இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்த பின்னரும் தமிழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த பிரசித்தி பெற்ற கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஐப்பசி சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் நாளையும் இந்த விழா பெரிய கோயிலில் நடைபெற உள்ளது. இதனால் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா

  • முன்னதாக கடந்த 25ம் தேதி பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு கோயிலில் பந்தக்கால் நடப்பட்டது. இதனையடுத்து இன்று கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கவியரங்கம், பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளது. அதேபோல நாளை, காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின்னர் ஓதுவார்களின் வீதியுலா நடைபெறும். இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் மலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா

  • இதனையடுத்து ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பு புனித நீரை வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்துவார்கள். தொடர்ந்து, பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை செய்யப்படும். பின்னர் இரவு ராஜராஜன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெறும்.

User Rating: 4.15 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button