Site icon ழகரம்

தியானம் செய்ய போறீங்களா இதோ உங்களுக்கான இந்த டிப்ஸ்

தியானம் பயிற்சி செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் நிறைய நன்மைகள் வரும். மனதை ஒரு நிலை படுத்தி நாம் நினைக்கும் விஷயங்களை செய்வதற்கு இந்த தியான பயிற்சிகள் உதவியாக இருக்கும். தியானம் செய்ய தொடங்கும் போது சில விஷயங்களை மனதில் வைத்து கொள்ளுங்கள். இது தியான பயிற்சி முழுமையாக நடக்க உதவியாக இருக்கும்.

 

தியானம் செய்ய தொடங்குவதற்கு முன் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். தியானத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. உங்களுக்கு எந்த தியான பயிற்சி செய்வதற்கு விருப்பமாக உள்ளதோ, அதை தேர்ந்தெடுத்து தினம் செய்யலாம். இது மிகவும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு தியான பயிற்சியும் நமக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் தியானம் செய்யும் போது புது விதமாக இருக்கும்.

நேரம் – அதிகாலை தூங்கி எழுந்தவுடன் தியானம் செய்வது அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள உதவும். எப்போதும் அதிகாலை நேரம் மட்டுமே நமக்கானதாக இருக்கும். மற்ற நேரங்களில் அலுவலகம், குடும்பம் ஆகியவற்றிற்கு நேரத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். இதனால் அதிகாலை எப்போதும், உடற் பயிச்சி மற்றும் தியானம் செய்வதற்கு நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்

இடம் – நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிந்தெடுத்து கொள்ளவும். எந்த வித வாடையும் இல்லாமல், முடிந்த வரை சுத்தமான காற்று கிடைக்கும் இடமாக இருப்பது நல்லது. மொட்டை மாடி, பூங்கா, அல்லது அறையில் நல்ல சுவாசம் கிடைக்கும்படி செய்து அங்கு தியானம் செய்யலாம். இது மனதை ரிலாக்ஸாக வைக்க உதவும்.

அமரும் நிலை – குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரே நிலையில் இருக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போல் நல்ல வசதியான இடத்தில் முதுகு கழுத்து நேராக வைத்து அமர்ந்து கொள்வது நல்லது. இது தியானம் செய்வது முக்கியம். நல்ல வசதியாக படுகையில் அமர்ந்தோ அல்லது சோபாவில் அமர்ந்தோ செய்யும்போது செய்யும் போது தூக்கம் வரும். அதனால் தரையில் அமர்ந்து நல்ல விரிப்பின் மீதோ, யோகா மேட் மீது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

எண்ணங்களை கட்டுப்படுத்தாதீர்கள். மனதை ஒரு நிலை படுத்துவது அவசியம். அதே சமயம் எண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் அது இயலாமல் மனஅழுத்தம் வரும். மனிதனின் எண்ணங்களை கட்டுப்படுத்தாமல் அதை ஒருங்கிணைக்க முயற்சி செய்யுங்கள். மனதை ஒருங்கிணைப்பது தான் தியானத்தின் நோக்கம். எந்த தியான பயிற்சியாக இருந்தாலும், எண்ணத்தை கவனிக்க மட்டும் சொல்லி கொடுப்பார்கள். அதனால் புதிதாக தியானம் செய்ய தொடங்குபவர்கள் எப்போதும் எண்ணங்களை கவனித்தால் போதுமானது. இதுவே மிக பெரிய மாற்றமாக அமையும்.

Exit mobile version