முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த விதிகளை மீறுவோரிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் தலா ரூ.200 அபராதம் வசூலித்து வந்தனர். இந்நிலையில் அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.