அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர்! கூடுதலாக 50 திரைகள் கேட்டபோது உதயநிதி மறுத்துவிட்டார்! வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ பரபரப்பு பேச்சு.
Editor Zhagaram
அஜித்தை விட விஜய்தான் பெரிய நடிகர்! கூடுதலாக 50 திரைகள் கேட்டபோது உதயநிதி மறுத்துவிட்டார் என்று வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ பேச்சு.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. மேலும் பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் வெளியாகிறது.
தமிழகத்தில் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், வாரிசு படத்தை Seven Screen ஸ்டுடியோவும் வெளியிடுகிறது. இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு மீடியாவுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜூ, அஜித் குறித்தும் ரெட் ஜெயன்ட் குறித்தும் பேசியது விவாதப் பொருளாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சரிசமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அஜித்தை விட விஜய் பெரிய நடிகர் என்பதால் கூடுதலாக 50 திரைகள் கேட்டபோது உதயநிதி மறுத்துவிட்டார்.
எனவே உதயநிதியை சந்தித்து மீண்டும் பேசவுள்ளதாக வாரிசு தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அஜித், விஜய், உதயநிதி ஸ்டாலின் பற்றி தில் ராஜூவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.