அரசியல்செய்திகள்

உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கை வரலாறு! | Suratha |

உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கை வரலாறு!

இயற்பெயர்: இராசகோபாலன்.

பிறந்தநாள்: 23-11-1921 

பிறந்த ஊர்: பழையனூர் தஞ்சை மாவட்டம்.

பெற்றோர்: திருவேங்கடம் சண்பகம் அம்மையார்.

உடன்பிறந்தவர்: வேதவல்லி(அக்காள்).

படிப்பு: பள்ளி இறுதி வகுப்பு வரை. 

ஆசிரியர்கள்: ஆறுமுக பக்தர், சிங்காரவேலு நயினார், மெய்யக்கோனார், ரங்கசாமிப் பிள்ளை, கோவிந்தராசு நாட்டார், சாமிவேலாயுதம் பிள்ளை. 

இலக்கண ஆசிரியர்: சீர்காழி அருணாசல தேசிகர்.

துணைவியார்: சுலோசனா அம்மையார்.

புதல்வர்: கவிஞர் கல்லாடன். 

மருமகள்: ராஜேஸ்வரி கல்லாடன்.

பேரக்குழந்தைகள்: இளங்கோவன் இளஞ்செழியன்.

உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கை வரலாறு!

  • உவமைக்கவிஞரின் முதல் சிறுகதை ” கவிஅமரன்”, இது நாரயணதுரைக் கண்ணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ” பிரசண்ட விகடன்” என்ற புகழ்பெற்ற வார இதழிலில் வெளிவந்தது. உவமைக் கவிஞரின் முதற்கவிதையின் முதல்வரிகள்: ” நடுவிரல் போல் தலைதூக்கு-நம்நாட்டாரின் இன்னலைப் போக்கு” பாரதியின் மீது பற்றுவைத்து தனது சுப்புரத்தினம் என்ற பெயரை எப்படி பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டாரோ அதைப் போலவே, பாரதிதாசனின் மேல் கொண்டபற்றின் காரணமாக அவரது இயற்பெயரான சுப்புரத்தினத்தை தனது பெயராக சுப்புரத்தினதாசன் என்று வைத்துக் கொண்டார். பிறகு பெயரைச் சுருக்கி சுரதா ” என அமைத்துக் கொண்டார்.
  • புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உதவியாளராக இருந்தார். வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிக்கு மிகுந்த உதவியாக இருந்தவர் நம் உவமைக் கவிஞர்.
  • 1942-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்களைப் பரப்பும் வகையில் சென்னையில் நாடகக் குழுவொன்றை அமைத்தார்கள்‌. முருகு சுப்பிரமணியன்‌, பெரியண்ணன்‌, இராம சுப்பையா, கிருஷ்ணராஜ் ஆகியோர்‌. கூடி அமைந்த இந்த நாடகக்‌குழுவின்‌ பெயர்‌ “முத்தமிழ்‌ நிலையம்‌”என்பதாகும்‌. இந்த நாடகக்‌ குழுவினரால்‌ பாரதிதாசனின்‌ “புரட்சிக்கவி” நாடகம்‌ தமிழ்‌நாட்டில்‌ பல இடங்களிலும்‌ நடத்தப்பட்டது. அதில்‌ அமைச்சர்‌ வேடத்தில்‌ உவமைக்கவிஞர்‌ நடித்தார்‌.
  • ஈ.வே.ரா பெரியார்‌, கலைவாணர்‌ என்‌. எஸ்‌. கிருஷ்ணன்‌, இரத்தின சாமிப்பிள்ளை ஆகியோரின்‌, தலைமையில்‌ நடைபெற்ற “புரட்சிக்‌கவி” கவிதை நாடகம்‌ அக்காலத்தில்‌ பெரும்‌ பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நாடகத்தில்‌ அமைச்சர்‌ வேடத்தில்‌ உவமைக்‌கவிஞர்‌ நடித்து, பெரும்‌ பாராட்டுதலைப்‌ பெற்றார்‌. அக்காலத்தில்‌ அரசவைக்‌ கவிஞராக இருந்தநாமக்கல்‌ கவிஞர்‌ வெ. இராமலிங்கம்‌ பிள்ளை அவர்களுடன்‌. பல மாதங்கள்‌ தங்கியிருந்து அவரது எழுத்துப்‌ பணிகளுக்கு உதவியாளராக இருந்தவர்‌ நமது உவமைக்‌ கவிஞர்‌.
  • அறிஞர்‌ வ.ரா. அவர்களை முதன்‌ முதலில்‌சந்தித்தபோது நீங்கள்‌ எழுதிய  சுவிதை ஒன்றைப்‌. பாடுங்கள்‌ என்று : சொல்ல, உவமைக்கவிஞரின்‌ பாடலைக்‌ கேட்டவுடன்‌ வ.ரா. “மற்றொரு பாரதி பிறந்து விட்டான்‌” என்று மனமாரப்‌ பலர்‌ முன்னிலையில்‌ பாராட்டினார்‌.உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கை வரலாறு!
  • நாராயணன்‌ என்பவரை ஆசிரியராகக்‌ கொண்டு புதுப்போட்டையிலிருந்து வெளிவந்த தலைவன்‌” இதழில்‌ துணை ஆசிரியராகப்‌ பணியாற்றிய உவமைக்‌ சுவிஞர்‌, அதில்‌ தொடர்ந்து சிறு கதைகள்‌, கவிதைகள்‌ எழுதிவந்தார்‌..
  • புகழ்பெற்ற சுவிஞர்‌ திருலோக சீதாராம்‌ அவர்கள்‌ தடத்தி வந்த “சிவாஜி” பத்திரிகையில்‌ ஆரம்ப காலத்தில்‌ உவமைக்‌ கவிஞரின்‌ கவிதைகள்‌ தொடர்ந்து வெளிவந்தன.
  • திருச்சி வானொலி நிலையத்தில்‌ ஒளிபரப்‌பான உவமைக்‌ கவிஞரின்‌ பல நாடகங்‌களில்‌ ஒன்றான “சுஜாதா” நாடகத்தை கேட்ட பல பெரியவர்கள்‌ பாராட்டினர்‌. கவிஞர்‌ கு.சா.கிருஷ்ணமூர்த்தி இவரை திரையுலகத்தினருக்கு அறிமுகப்படுத்தி திரைத்துறையில்‌ இணைத்து வைத்தார்‌.
  • 1944-ல்‌ “மங்கையர்க்கரசி” என்ற திரைப்படம்‌ தயாரானது. உவமைக்‌ கவிஞர்‌ முதன்முதலில்‌திரைப்படத்திற்கு உரையாடல்‌ தீட்டியபடம்‌ இதுதான்‌. திரையுலக வரலாற்றிலேயே மிகக்‌குறைந்த வயதில்‌ திரைப்படத்திற்கு உரையாடல்‌ எழுதியவரும்‌ நமது உவமைக்‌ சுவிஞரே.இந்தப்படம்‌ வெளிவந்து மிகப்பெரும்‌ வெற்றிபெற்றது. அக்காலத்தில்‌ வசன உலகத்தின்‌ சர்க்கரவர்த்தியாக இருந்த இளங்ககோவன்‌ அவர்கள்‌. உவமைக்‌ கவிஞரின்‌ உரையாடல்‌ திறனைப்‌ பெரிதும்‌ பாராட்டினார்‌.
  • உவமைக்கவிஞரின்‌ ” மங்கையர்கரசி” வசனம்‌ மிகவும்‌ புகழ்பெறவே அதை நூல்‌ வடிவில்‌ கவிஞர்‌ வெளியிட்டார்‌. பாவேந்தர்‌, நாமக்கல்‌ கவிஞர்‌ இருவரின்‌ வாழ்த்துரையுடன்‌ வெளிவந்த இந்த வசன நூல்தான்‌ ஒரு திரைப்‌படத்தின்‌ கதைவசனம்‌ புத்தக வடிவில்‌ முதன்‌முதலாக வந்ததாகும்‌. உவமைக்கவிஞரின்‌ முதல்‌ நூலை வி.ஆர்‌.எம்‌.செட்டியார்‌ ஸ்டார்‌ பிரசுரமாக 1946-ஆம்‌”ஆண்டு மார்ச்‌ மாதம்‌ வெளியிட்டார்‌. புத்தகத்தின்‌ பெயர்‌ “சாவின்‌ முத்தம்‌”. 1956-ல்‌ “பட்டத்தரசி” என்கிற சிறு காவியநாலை உவமைக்‌ கவிஞர்‌ வெளியிட்டார்‌. 16 பக்கங்கள்‌ கொண்ட பரபரப்புக்குரிய அந்நூலின்‌ மூன்னுரைக்கவிதையை ஒருமணிநேரத்திலேயே எழுதி முடித்து சாதனை படைத்தார்‌.
  • 1954-ல்‌ கலைஞர்‌ மு. கருணாநிதி அவர்களின்‌ முரசொலி” இதழில்‌ உவமைக்‌ சவிஞர்‌தொடர்ந்து கவிதை எழுதி வந்தார்‌. எழுச்சியும்‌, வேகமும்‌ நிறைந்த அந்தக்‌ ‘ கவிதைகளைப்‌ படித்துத்தான்‌ “சுரதா பரம்பரை என்று சொல்லிக்‌ கொள்வதில்‌ பெருமைப்‌படுகிற அளவுக்கு பெருமளவில்‌ கவிதை ரசிகர்கள்‌ இவருக்கு உருவாயினர்‌.
  • 1955-ல்‌ “காவியம்‌” என்கிற கவிதை வார இதழை உவமைக்‌ கவிஞர்‌ துவக்கினார்‌. உலகிலேயே முதன்‌ முதலாக கவிதையிலேயே வார இதழை நடத்தியவர்‌ என்கிற பெருமையைப்‌ பெற்றார்‌.
  • காவியத்தைத்‌ தொடர்ந்து “இலக்கியம்‌” (1958), ஊர்வலம்‌(1764) “விண்மீன்‌” (1964) என்று பல இலக்கிய ஏடுகளை துவக்கி நடத்தி வந்தார்‌ உவமைக்‌ கவிஞர்‌.
  • 1965-ல்‌ உவமைக்‌ கவிஞரின்‌ புகழ்பெற்ற “தேன்மழை” என்கிற கவிதை நூல்‌ வெளிவந்தது. 1969-ல்‌ இந்நூலுக்கு தமிழக அரசின்‌ பரிசு கிடைத்தது.
  • 1969-ல்‌ உவமைக்கவிஞர்‌ அவர்கள்‌ தனது பெயரிலேயே சுரதா” என்கிற கவிதை மாதமிருமுறை இதழைத்‌ தொடங்கினார்‌. அதன்‌பிறகே சுவிஞர்கள்‌, தங்கள்‌ பெயரில்‌ இதழ்களைத்‌ தொடங்கும்‌ முறையைக்‌ கொண்டு வந்தனர்‌.
  • 1977-ல்‌ “ஆனந்தவிகடன்‌” வார இதழில்‌ வாரந்தோறும்‌ உவமைக்கவிஞர்‌ எழுதி வந்த கவிதைகள்‌, பெரும்‌ பரபரப்பை ஏற்படுத்தின;
  • ஓராண்டுக்‌ காலத்திற்கு மேல்‌ வாரந்தோறும்‌ ஆனந்தவிகடனில்‌ உவமைக்‌ சுவிஞரின்‌ கவிதைகள்‌ வெளிவந்தன. விகடனில்‌ மற்றவற்றைவிட இவரது கவிதைக்கே அதிக அளவில்‌ கடிதங்‌கள்‌ வந்து குவிந்தது சிறப்புக்குறியதாகும்‌. பாவேந்தரைத்‌ தொடர்ந்து 1906-ல்‌ தமிழ்க்‌கவிஞர்‌ பெருமன்றத்தின்‌ தலைவராக இருந்து செயல்பட்டார்‌. மீண்டும்‌ இருபதாண்டுக்‌ காலத்திற்குப்‌ பிறகு தலைவராகத்‌ தேர்ந்தெடுக்‌கப்பட்டு பல்வேறு நல்லதிட்டங்களை செயல்‌படுத்தினார்‌.உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கை வரலாறு!
  • 1972-ல்‌ தமிழக அரசு உவமைக்கவிஞருக்கு “கலைமாமணி” பட்டம்‌ வழங்கியது.
  • 1975-ல்‌ எம்‌.ஜி.ஆர்‌. தலைமையிலான தமிழக அரசு முதன்‌ முதலில்‌ ஏற்படுத்திய “பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ விருது” (ரூ 70,0002 தொகை-4 பவுன்‌ தங்கப்‌ பதக்கம்‌) உவமைக்‌ கவிஞருக்கு வழங்கி தமிழக அரசு பெருமையடைந்தது. 1980-82-ல்‌ தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர்‌, மலேசியாவுக்கு இருமுறை நிண்டகாலசகுற்றுப்பயணம்‌ செய்து பல நிகழ்ச்சிகளில்‌ பங்கு கொண்டார்‌.
  • 1952-ல்‌ உவமைக்கவிஞரின்‌ அறுபது வயது நிறைவையொட்டி தமிழக நிதியமைச்சர்‌ டாக்டர்‌ நாவலர்‌ தலைமையில்‌ “கவிஞர்‌ சுரதா மணிவிழா” நடைபெற்றது. இலக்கிய அன்பர்‌கள்‌ கவிஞருக்கு திரட்டிய நிஜி ரூ.60,000 அந்த விழாவில்‌ உவமைக்‌ கவிஞருக்கு வழங்கப்‌பட்டது. விழாக்குழுவின்‌ சார்பில்‌ மணிவிழா மலரும்‌ வெளியிடப்பட்டது.
  • 1982-ல்‌ தவத்திரு குன்றக்குடி, அடிகளார்‌ அவர்‌களின்‌ மடத்தில்‌ பாரி வள்ளல்‌ விழாவின்‌ போது கவியரசர்‌” பட்டமும்‌ தங்கப்‌பதக்கமும்‌ உவமைக்‌ கவிஞருக்கு வழங்கப்‌பட்டது.
  • 1987-ல்‌ மலேசியாவில்‌ நடைபெற்ற 6-வது உலகத்தமிழ்‌ மாநாட்டில்‌ சிறப்பு விருத்தினராக அழைக்கப்பட்டு பங்குகொண்டு உரையாற்றினார்‌. அப்போது “உலகத்‌ தமிழ்க்‌கவிஞர்‌ பேரவை” அங்கு அமைக்கப்பட்டது. உலகின்‌ பல நாடுகளில்‌ உள்ள தமிழ்க்‌கவிஞர்கள்‌ பலரும்‌ கூடி அதன்‌ தலைவராக உவமைக்‌கவிஞரைத்‌ தேர்ந்தெடுத்தனர்‌.உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கை வரலாறு!
  • 1989-ல்‌ அரபுநாடுகளில்‌ ஒன்றான “சார்ஜா”வுக்கு உவமைக்‌ கவிஞர்‌ சுற்றுப்‌ பயணம்‌ செய்து அங்கு பல நிகழ்ச்சிகளில்‌ பங்கு கொண்டார்‌.
  • பாவேந்தர்‌ நூற்றாண்டான 1990-ல்‌ டாக்டர்‌ கலைஞர்‌ தலைமையிலான தமிழக அரசின்‌ சார்பாக முதன்‌ முதலாக ஏற்படுத்தப்பட்ட கலைத்‌ துறை வித்தகருக்கான பாரதிதாசன்‌ விருது” உவமைக்‌ கவிஞருக்கு வழங்கப்பட்டது.
  • 1990-ம்‌ ஆண்டு கேரள மாநிலத்தில்‌ “மகாகவி குமரன்‌ : ஆசான்‌” அவர்களின்‌ நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள “குமரன்‌ ஆசான்‌ விருது” உவமைக்‌ கவிஞருக்கு வழங்கப்பட்டது. இதுவரை 1000க்கும்‌ மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத்‌ தலைமையேற்று நடத்தியிருக்கிறார்‌. 2000 கவிஞர்கள்‌ இவர்‌ தலைமையில்‌ பாடியிருக்கின்றார்‌.
  • உலகிலேயே முதன்‌ முதலாக கவிதை வார இதழ்‌ தொடங்கி நடத்தியவர்‌. இதழின்‌ பெயர்‌ “காவியம்‌”. வீட்டுக்கு விடு கவியரங்கம்‌, முழுநிலாக்‌ கவியரங்கம்‌, படகுக்‌ கவியரங்கம்‌, ஆற்றுக்‌கவியரங்கம்‌ விமானக்‌ கவியரங்கம்‌, கப்பல்‌ கவியரங்கம்‌ என்று கவியரங்க நிகழ்ச்சிகளை பல்வேறு நிலைகளில்‌ நடத்தி புதுமையும்‌, புரட்சியும்‌ செய்து வருகிறார்‌.
  • ஒவ்வொருவரும்‌ தமது இல்லத்தில்‌ தனது கருத்துக்களை அல்லது தாம்‌ விரும்பும்‌ மற்றவருடைய கருத்துக்களை கல்வெட்டாக அமைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று வலியுறுத்தி, அதனைத்‌ தொடர்ந்து செய்து வருகிறார்கள்‌. வீட்டுக்கு வீடு திருவள்ளுவர்‌, பாரதிதாசன்‌ படத்திறப்புவிழா என்கிற திட்டத்தை அறிவித்து அதைத்‌ தொடர்ந்து செயல்‌படுத்தி வருகிறார்‌.
  • “சுரதா தனிப்‌ பயிற்சி கல்லூரி” என்று அவரது பெயரைத்‌ தாங்கிய கல்லூரியை டாக்டர்‌ எச்‌.ஜி. செல்வராஜ்‌ திருச்சியில்‌ நடத்தி வருகிறார்‌.
  • “உவமைக்கவிஞர்‌ சுரதா மன்றம்‌” என்கிற அமைப்பு கள்ளக்குறிச்சியில்‌ (தெ.ஆ.மாவட்டம்‌) புலவர்‌ டாக்டர்‌ இரா. வீரன்‌ அவர்களால்‌ தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • இவரது கவிதை அனைத்து இந்திய பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. சென்னை, மதுரை பல்கலைக்‌ கழகங்களிலும்‌, கேரள பல்கலைக்கழகம்‌, மலேசியா, சிங்கை பல்கலைக்‌ கழகத்திலும்‌ இவரது நூல்கள்‌ பாட நூலாக வைக்கப்பட்டிருக்கின்றன. உலகமகாகவி ஷேக்ஸ்பியரின்‌ அனைத்துப்‌ படைப்புகளும்‌ ஒரே புத்தக வடிவமாகி வெளிவந்திருப்பதைபோல்‌ இவரது படைப்புகள்‌ அனைத்தும்‌ ஒரே புத்தகவடிவமாக உருவாகிவருகிறது.
  • கம்பனின்‌ மகன்‌ அம்பிகாபதியைப்போல்‌ இவரது ஒரேமகன்‌ கல்லாடனும்‌ மிகச்‌ சிறந்த கவிஞராகத்‌ திகழ்பவர்‌. இவரது மகன்‌ கல்லாடன்‌ மிகச்சிறந்த கவிஞருக்கான வி.ஜி.பி.விருது பெற்றிருக்கிறார்‌.. சுரதாவின்‌ பேரன்‌ இளங்கோவன்‌ கரூர்‌ திரு.வி.க. மன்றத்தினரால்‌ “தொலைக்‌காட்சித்‌ தோன்றல்‌ விருது பெற்றிருக்கிறார்‌.
  • “நட்சத்திர இரவு” “இசை இரவு” என்பதை போல்‌ ” சுரதா இரவு” என்று இவரது பாடலைக்‌ கொண்ட இசைநிகழ்ச்சி சேலத்தில்‌ நடைபெற்று பரபரப்பையும்‌ வெற்றியையும்‌ ஏற்படுத்தியது. அதன்‌ பிறகே அனைவரும்‌ அதனை பின்பற்றினர்‌.
  • 20க்கு மேற்பட்ட கதை, சவிதை, கட்டுரை நூல்களும்‌ 100-க்கு. மேற்பட்ட திரைப்‌படங்களுக்கு பாடல்களும்‌ எழுதியுள்ள உவமைக்கவிஞர்‌ நான்கு திரைப்படத்திற்கு வசனம்‌ தீட்டியுள்ளார்‌.
  • 1989-ஆம்‌ ஆண்டு இந்திய தொலைக்காட்சி தேசிய ஒளிபரப்பில்‌ ஒவ்வொரு மொழியிலும்‌ சிறந்த கவிஞர்களின்‌ வாழ்க்கை வரலாற்றை அவர்கள்‌ பிறந்த கஊர்களுக்‌கும்‌, வாழும்‌ இடத்திற்கும்‌ சென்று படம்‌ பிடித்து ஒளிபரப்பினார்கள்‌. அப்போது “தமிழ்‌ மொழியின்‌ சிறந்த கவிஞர்‌” என்ற தலைப்பில்‌ 40 நிமிட கவிஞர்‌ சுரதா அவர்களின்‌ வாழ்க்கை வரலாற்றை ஒளி பரப்பி தொலைக்காட்சி தமிழுக்கு பெருமை சேர்த்தது.
  • 1993-ஆம்‌ ஆண்டு ஈரோட்டில்‌ அமைக்கப்‌பட்டுள்ள ராணா அறக்கட்டளையின்‌ “ராணா விருது” (ரூ.10,000 தொகை கொண்டது) வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button