உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்து வரும் சுவாமி பிரசாத் மவுரியா திடீரென பதவி விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ம் ேததி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் அக்கட்சியிலிருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் மவுரியா சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். தலித், இதர பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலை இல்லாதோர், சிறு தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறை நடைபெறுவதால் என் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மூன்று எம்எல்ஏக்களான ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாகர் ஆகியோர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அவர்களும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.