அரசியல்செய்திகள்

தமிழக அரசு “அரசாணை 115’ஐ திரும்ப பெற வேண்டும்! டிடிவி தினகரன்!

அமமுக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கை...

தமிழக அரசு “அரசாணை 115-ஐ திரும்ப பெற வேண்டும்! டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

  • அரசுப்பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
  • அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியிலுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார்மயமாக்க தி.மு.க அரசு, திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

டிடிவி தினகரன்

  • அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய்விடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
  • இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமமாகும். தி.மு.க.வின் போலி திராவிட மாடல் அதைத்தான் செய்ய விரும்புகிறதா? என்ற அவர், தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

டிடிவி தினகரன்

  • திரும்பப் பெறாவிட்டால், அரசு ஊழியர்கள், இளைஞர் சக்தி மற்றும் பொதுமக்களோடு இணைந்து அமமுக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

User Rating: 4.43 ( 2 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button