Site icon ழகரம்

மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதா கைது…..!

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய கீதா பள்ளியில் பயிலும் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது.

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர் ரமேஷ் இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

மாணவிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்ததையடுத்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் தலைமை ஆசிரியை கீதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

 

Exit mobile version