நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? விஜய் தாயார் ஷோபா பதில்??
- பிரசித்திபெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு, நடிகர் விஜயின் தாயார் ஷோபா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்ததாகவும் உலகமே சமாதானமாகவும், சந்தோஷமாகவும் ,நோய் நொடியின்றி இருக்கணும் என்பதற்காக தான் சுவாமி தரிசனம் செய்ய வந்தேன்.
- ரொம்ப நேரம் காமாட்சியம்மன் அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்தது சந்தோஷமாக,இருக்கிறது. எல்லாரும் வேண்டிக்கங்க விஜய் நடித்து வெளிவர இருக்கின்ற வாரிசு திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என எல்லாரும் வேண்டிக்கங்க என்று பேசினார்.
- மேலும் செய்தியாளர்கள் வாரிசு படத்தின் கேரக்டர் பற்றியும் , அடுத்த படம் எந்த மாதிரி கேரக்டர் நடிக்க உள்ளார் என கேட்டதற்கு, அவர் வாரிசு படத்திலேயே எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரியாது. நீங்கள் அடுத்த படத்தை பற்றி கேட்கிறீர்கள் இந்த படத்தில் அவர் பேமிலி சென்டிமென்ட் கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறினார்.
- பின்னர் அரசியல் வருவதைப் பற்றி கேட்டதற்கு, எனக்கு அதபத்தி ஒன்னுமே தெரியாது. விஜய் என்ன டிசைட் பண்றாரோ! கடவுள் என்ன நினைக்கிறாரோ! என பதிலளித்தார்.
User Rating:
Be the first one !
Back to top button