அரசியல்செய்திகள்

NLC’யில் தொடரும் தீ விபத்து! தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சையும், இழப்பீடும், மீண்டும் பணி சேர இயலாதவர் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வேண்டும் வேல்முருகன் கோரிக்கை!

என்.எல்.சியின் அலட்சியத்தால் தொடரும் தீ விபத்து! பாதிக்கப்படும் அப்பாவி தொழிலாளர்கள்!

  • நெய்வேலியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது.
  • ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி அனல்மின் நிலையத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்தில், 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
  • கடந்த காலங்களில் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து, என்.எல்.சி நிர்வாகம் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை, இப்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து பறைசாற்றுகிறது.
  • கடந்த காலங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பாடம் கற்று, விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்தை தவிர்த்திருக்கலாம். தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
  • தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு, நெய்வேலி அனல்மின் நிலையம் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படுகிறது. அதற்கேற்றால் போல், உயர் தொழில்நுட்பத் திறனைக் கணக்கிலெடுத்து அவர்களிடம் பராமரிப்புப் பணியை ஒப்படைத்திருக்க வேண்டும்.
  • அதற்கு மாற்றாக, என்.எல்.சி நிர்வாகம், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், உயர்தொழில் நுட்ப வசதியில்லாத நிறுவனத்திற்கும், பராமரிப்பு மேற்கொள்ள ஒப்பந்தம் வழங்குவதால், இப்படியான தீ விபத்து தொடர்கதையாகி வருகிறது.
  • அதுமட்டுமின்றி, என்.எல்.சியில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பதும், தொலைநோக்குப் பார்வையுடன் முறையான கண்காணிப்பு செய்யாமலிருப்பதும், பாதுகாப்பு சாதன பற்றாக்குறையும், நிர்வாகத்தின் அக்கறையற்ற தன்மையை காட்டுகிறது. மேலும், தொழிலாளர்களின் உயிரை துச்சமென கருதும் நடவடிக்கையாகும்.
  • எனவே, எதிர் வரும் காலங்களில்,  இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதலை என்.எல்.சி நிர்வாகம் உருவாக்க வேண்டும்.
  • மேலும், விபத்தில் காயமடைந்த 5 தொழிலாளர்களுக்கு, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு போதுமான இழப்பீடும், மீண்டும் பணியில் சேர முடியாதவர்களுக்கு, அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு மாற்று வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும்.
  • விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய, தொழிற்சங்க நிர்வாகிகள் அடங்கிய, உயர்மட்ட விசாரணை குழு அமைத்து, விபத்துக்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, என்.எல்.சி நிர்வாகம் முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
  • இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button