Site icon ழகரம்

அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைப்பு….!

கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் மூன்றாவது அலை கட்டுப்படுத்துவதற்காக ஞாயிறன்று முழு பொதுமுடக்கம், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு என தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

கட்டுப்படுத்துவதற்காக ஞாயிறன்று முழு பொதுமுடக்கம், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு என தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ”பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஜனவரி 20ம் தேதிக்கு பின் நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.

கொரோனா தாக்கத்தைப் பொறுத்து பின்னர் அறிவிக்கப்படுவதோடு, மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு தேதி அறிவிக்கப்படும்.

அரசின் உத்தரவை மீறி தேர்வுகள் நடத்தப்பட்டால் கல்லூரி மூடுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

 

Exit mobile version