கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தாளாளர் ரவிக்குமார் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!
- கள்ளக்குறிச்சி கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிரான மனு மீது பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கிய நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக்கோரி, மாணவியின் தாய் செல்வி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் முன்பு, மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை உயர்நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லை எனவும், அறிக்கையில் சந்தேகப்படும்படியாக உள்ள காயங்களை கருத்தில் கொள்ளவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
- இதுகுறித்து தமிழக காவல்துறை, பள்ளி நிர்வாகிகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேர் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
User Rating:
4.2
( 1 votes)
Back to top button