- மதுரை விமான நிலையத்தில் “இந்தியில்” பேச சொல்லி வற்புறுத்திய அதிகாரிகள். ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் மட்டுமே தன்னிடம் பேசியதாக நடிகர் சித்தார்த் கடும் எதிர்ப்பு. யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறகு நடிகர் சித்தார்த் விமான நிலையத்தில் இந்தி பேச சொல்லி அவமானப்படுத்திய நிகழ்வு!
- மதுரை விமானநிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் ஆங்கிலத்தில் பேச சொல்லியும் தொடர்ந்து இந்தியில் பேசி வந்ததாகவும் நடிகர் சித்தார்த் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் பதிவு செய்திருந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,
- தான் மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.அதில் மதுரை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபடும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் புகைப்படத்துடன்,”காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம்.
- என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர்.மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர்.
- வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என நடிகர் சித்தார்த் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்டிருந்தார்.
- இதற்கு முன்னதாக யுவன் சங்கர் ராஜா மதுரை நிலைய விமான நிலையத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச சொல்லி கேலி செய்ததாகவும். பல நேரங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்ததாகவும், இந்தியை திணிக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார். மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளை தமிழில் பேச சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
- சங்கம் வைத்து “தமிழ் வளர்த்த மதுரையில்” இந்தியில் கட்டாயம் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்திய தொடரும் இதுபோன்ற நிகழ்வு தமிழர்களிடத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
User Rating:
Be the first one !
Back to top button