- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகிய சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை வழங்கியது. இதனை அடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் உயர் நீதிமன்றம் கொடுத்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார்.
- அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால் அவர் ஜாமீனில் வெளி வரும் சூழல் நிலவிய நிலையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளுக்காக சவுக்கு சங்கரை சென்னை மத்திய சைபர் க்ரைம் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
- அதனை தொடர்ந்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை, 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சிறையிலிருந்து வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்!!
- சிறைக்கு செல்வதற்கு முன், சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்களில் பேசிவந்த சவுக்கு சங்கர். சிறைக்கு சென்ற பிறகு பேசப்படாமல், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் பற்றி விவாதிக்கப்படாமல் இருப்பதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
- குறிப்பாக அரசியலில் “பேசப்படாத” அனைத்தையும், பேசுவதற்கு சவுக்கு சங்கர் மீண்டும் வெளியே வரவேண்டும் என்ற எண்ணம் அரசியல் பேசும் இளைஞர்கள் மத்தியில் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பிணை கிடைத்துள்ள சவுக்கு சங்கர் மீண்டும் ஊடகங்களில் முன்பைவிட தீவிரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ழகரம் Voice ஊடகத்திற்கு பேட்டி அளித்த Redpix ஃபெலிக்ஸ்! சவுக்கு சங்கருக்கு விரைவில் பிணை கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார் அதேபோல தனக்கும் கைது, சிறை போன்ற அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்! சவுக்கு சங்கரை நேரில் கடலூர் சிறையில் சந்திப்பதையும், சிறையில் சவுக்கு சங்கர் கூறியவற்றையும் நம்முடன் பகிர்ந்திருந்தார்!
Redpix Felix Full Interviw Link:
“குண்டாஸ் தான் சவுக்கு சங்கருக்கு Target ! செந்தில் பாலாஜி தான் காரணம்!” Redpix Felix Interview
- மேலும், நமது பேட்டியில் Redpix ஃபெலிக்ஸ் பேசியபோது, சவுக்குசங்கர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, இளைஞர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கும் ஃபெலிக்ஸ், சவுக்கு சங்கர் பேட்டி நிச்சயம் வெளிவரும் என்றார். அரசியல் நிகழ்வுகள், சமூக சார்ந்த இருவரின் விவாதங்களை காண பொதுமக்கள், இளைஞர்களோடு நாமும் காத்திருப்போம்…!!