மாவீரர்நாள் தமிழீழப்பாடலை பாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் பாடகி தீ. கனடா நினைவேந்தல் இசை நிகழ்வில்!
- பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் ஈழத்துப் பாடலான “ஓ மரணித்த வீரனே” என்ற பாடலை தனது மகள் பாடகி தீ உடன் சேர்ந்து பாடியுள்ளார்.
முழுமையான பாடல் வரிகள்:
ஓ மரணித்த வீரனே…
உன் சீருடைகளை எனக்குத்தா…
உன் பாதணிகளை எனக்குத்தா…
உன் ஆயுதங்களை எனக்குத்தா…
ஓ மரணித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா…
உன் பாதணிகளை எனக்குத்தா…
உன் ஆயுதங்களை எனக்குத்தா…
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு…
ஓ மரணித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா…
உன் பாதணிகளை எனக்குத்தா…
உன் ஆயுதங்களை எனக்குத்தா…
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
வார்த்தைகள் போதவில்லை வரலாறு பாடுமுன்னே.
ஓ மரணித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா…
உன் பாதணிகளை எனக்குத்தா…
உன் ஆயுதங்களை எனக்குத்தா…
ஓ மரணித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா…
உன் பாதணிகளை எனக்குத்தா…
உன் ஆயுதங்களை எனக்குத்தா…