தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.317.08 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த மூன்று நாட்களில் ரூ.675.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
மதுரை மண்டலத்தில் 68.76 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 59.65 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 59.28 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 65.52 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 63.87 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் நேற்று ஒரே நாளில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.