அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2021 ம் ஆண்டு கோவை தொண்டாமுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவர்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். அந்த பகுதிக்கு மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரும் பொழுது அவர் மீது தாக்குதல் நடத்த தூண்டும் விதத்தில் பேசியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதுடன் , இரு மதங்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக ராஜேந்திரபாலாஜி பேசியதாகபுகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் புகழேந்தி.