ஐயா பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணி கட்சியின் புதிய தலைவராக செ.ப.முத்தமிழ் மணி தேர்வு செய்யப்பட்டார்!
Editor Zhagaram
ஐயா பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணி கட்சியின் புதிய தலைவராக செ.ப.முத்தமிழ்மணி தேர்வுசெய்யப்பட்டார்!
ஞாயிற்றுக்கிழமை அன்று காரைக்குடி எவரெஸ்ட் மகாலில் நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழுவினர் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டம். ஐயா பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றபோது…
இளைஞர் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டிய இன்றியமையாமையை குறித்து விளக்கி வேண்டுகோள் விடுத்தார். அதற்கிணங்க மூத்த தலைவர் அயனாபுரம் சி. முருகேசன் அவர்கள் தலைவர் பொறுப்புக்கு செ.ப. முத்தமிழ்மணி அவர்களின் பெயரை முன்மொழிந்தார்.
பொதுச்செயலாளர் மரு. இலரா. பாரதிசெல்வன் வழிமொழிந்தார். மூத்த தலைவர்கள் துரை. மதிவாணன், தி.ம. பழநியாண்டி, சி.சி. சாமி, கு.செ. வீரப்பன் மற்றும் பொதுச் செயலாளர் பசுமலை, பொருளாளர் ம. உதயகுமார், ஆகியோர் வழிமொழிந்தனர்.சா. இராமன், மாவட்டத் தலைவர் அருணா சுந்தரராசன், மனோகரன் மற்றும் தோழர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
ஏகமனதாக செ.ப. முத்தமிழ்மணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவரை வாழ்த்தி பழ. நெடுமாறன் உள்பட பலரும் பேசினர்.