- மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சபாக்களில் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும், நீலம் பண்பாட்டு மையம் என்றாலே அனுமதி கிடைப்பது இல்லை எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
- கலைவாணர் அரங்கில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடத்த பல முறை முயன்றும் எதுவும் நடக்கவில்லை என அவர் தெரிவித்து இருக்கிறார்.
- சினிமா மட்டுமின்றி நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை தொடங்கி மார்கழியின் மக்களிசை, கேஸ்ட்லஸ் கலெக்டிவ், கூகை பயிலகம், போன்றவற்றையும் அவர் நடத்தி வருகிறார். சமூக, அரசியல் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
- தற்போது சென்னை சேத்துப்பட்டுவில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக பா.ரஞ்சித் நடத்தி வருகிறார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
- அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு பா.ரஞ்சித் அளித்த பேட்டியில், “நீலம் பண்பாட்டு மையத்தின் நிகழ்வுகளுக்கு சபாக்களில் அனுமதி மறுக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என அழுத்தம் தரப்படுகிறது. தனியார் சபாக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் இப்படிதான் நடக்கிறார்கள். இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை கலைவாணர் அரங்கில் நடத்த விரும்பினோம்.
- அதற்காக எவ்வளவோ முயற்சி செய்தும், அது முன்பதிவு செய்யப்படுவதற்கு முன்பே பதில் கிடைக்காமல் இருந்தது. அரசு அரங்கங்களை முன்பதிவு செய்யும் அனுமதியும் வழங்கப்படவில்லை. முறையான பதிலும் இல்லை. பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டன. இதனால் வேறு அரங்குகளில் நிகழ்ச்சியை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.” என்றார்.
User Rating:
Be the first one !
Back to top button