உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வாக்குப் பதிவு நிறைவடையவுள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பிலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.