ஒரே நாடு! ஒரே இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்!
Editor Zhagaram
ஒரே நாடு! ஒரே இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்!
இந்திய ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு வீரேந்திர குமார் அவர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும், ரவிக்குமார் அவர்களும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்!
மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்து வாழும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அவர்களுக்குரிய இடஒதுக்கீடு இப்போது வழங்கப்படுவதில்லை. இடஒதுக்கீடு அளிப்பதற்கு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் சாதி வேறுபாடு இல்லாமல் பொது மயானங்களை/ இடுகாடுகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு வீரேந்திர குமார் அவர்களிடம் கொடுத்த அக்கடிதங்களில் வலியுறுத்தியுள்ளனர்.