மு.க. ஸ்டாலினுக்கு தகுதியில்லை! கனிமொழிக்குதான் தகுதி! இரண்டரை ஆண்டுகள் கனிமொழியை முதலமைச்சராக்குங்கள் சீமான்!
- இன்று வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
- செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவிற்கு செல்பவர்களுக்கு பெரிய பதவி, பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு?
- நீங்கள் தான் என்னுடைய செல்வாக்கை புரிந்து கொள்ளவில்லை நான் பெரிய செல்வாக்கு உடையவன் என்றார்.
- பின்னர் திமுக அரசு மகளிர் தலைநிமிர மாநிலம் நிமிரும் என்கிறீர்கள்! நான் வரவேற்கிறேன். நீங்கள் மகளிருக்கு கொடுத்த உயர்வு என்ன?
- தமிழக அமைச்சரவையில் எத்தனை பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளீர்கள் இரண்டு! சட்டசபையில் எத்தனை இடம் கொடுத்து உள்ளீர்கள்??
- பாராளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்?? திமுக கட்சியில் எத்தனை பொறுப்பு கொடுத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்??
- நாடெங்கிலும் மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு மகளிர் நிமிர்தல் எப்படி வரும்? தாலியை அறுத்து விட்டு தலைகுனிந்து போவதுதான் மகளிர் தலைநிமிர்ந்தலா என்றார்??
- வாரிசு அரசியலில் விருப்பமாக இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியிலிருந்து விலகி விட்டு உங்கள் குடும்பத்திலேயே உங்கள் சகோதரி கனிமொழியை இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்கி மகளிர் தலை நிமிரதலை செயல்படுத்துங்கள்.
- மு.க. ஸ்டாலினை விட கனிமொழி தகுதியானவர் என்று, தான் நினைப்பதாக சீமான் தெரிவித்தார். இதை கட்சிக்காரர்களும் மறுக்கமாட்டார்கள். பொதுமக்களும் மறுக்க மாட்டார்கள் என்றார்.
- நான் முதலமைச்சரானால் அமைச்சரவையில் எத்தனை பொறுப்புகள் இருக்கிறதோ அத்தனை பொறுப்புகளில் சரி பாதியாக பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவேன் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
User Rating:
Be the first one !
Back to top button