நெய்வேலி மக்களுக்காக ஒன்றிணைந்து போராடிய வேல்முருகனும், திருமாவளவனும் கூட்டணி கட்சிகளும்!
Editor Zhagaram
நெய்வேலி மக்களுக்காக ஒன்றிணைந்து போராடிய வேல்முருகனும், திருமாவளவனும் கூட்டணி கட்சிகளும்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் அம்மக்களின் நியாயமான 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தவாக தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். விசிக தலைவர் தொல் திருமாவளவன், தோழர் பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், பேரா.ஜவாகிருல்லா, இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, துரை. சந்திரசேகர், இராஜூ, சண்முகம், மணிவாசகம் ஆகியோர் உரையாற்றினர்.
நிலம் மற்றும் வீடுகளை இழந்த- இழக்கவுள்ள மக்களுக்காக பொதுக்கூட்டத்தில் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார்.
நிலம், வீடு இழந்தோருக்குப் போதிய இழப்பீடு, நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட 17 வகையான கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தினர். பல்லாயிரக் கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் சிறுகுறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
நிலம் வழங்கும் மக்களுக்கு போதிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு கட்டாயம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.