Site icon ழகரம்

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்……..!

தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05/01/2022) உத்தரவிட்டுள்ளார்.

நாளை (06/01/2022) இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த பணிகள், ஏ.டி.எம்.கள், சரக்கு வாகனம், எரிபொருள் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஜனவரி 9- ஆம் தேதி அன்று உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9- ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து திரையரங்குகளிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

உற்பத்தி ஆலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

பேருந்துகள், புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50% பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.

அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானம், ரயில், பேருந்து நிலையங்களுக்கு செல்ல வாடகை, சொந்த வாகனங்களை பயன்படுத்தலாம்; பயணிகள் டிக்கெட் வைத்திருப்பது அவசியம்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version