Site icon ழகரம்

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் காணொலியில் திறந்து வைத்த பிரதமர் மோடி….!

இன்று (12/01/2022) பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலையில் ரூபாய் 4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்.

மேலும் சென்னை பெரும்பாக்கத்தில் ரூபாய் 24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

 

Exit mobile version