Site icon ழகரம்

கர்நாடக தொழிற்சாலையில் அமோனியம் வாயு கசிவு…!

கர்நாடக மாநிலத்தின் மங்களூரு தொழிற்சாலை ஒன்றில் 80-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென அமோனிய வாயு கசிந்ததாகக் கூறப்படுகிறது.

அமோனிய வாயு கசிந்ததில் அவதிக்கு ஆளான 16 பெண்கள் உட்பட 20 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி முகமது நவாஸ் கூறியது: “கர்நாடக மாநிலதைச் சேர்ந்த மங்களூரு புறநகர்ப் பகுதியின் முக்கா என்ற இடத்தில் எவரெஸ்ட் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இதில் இன்று 80க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று மதியம் தொழிற்சாலையின் ஒரு பகுதியிலிருந்து திடீரென அமோனிய வாயு கசிந்தது. இதனால் பலருக்கும் கண் எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும், இன்னும் சில சிரமங்கள் ஊழியர்களுக்கு ஏற்பட்டதை அடுத்து உடனடியலாக பணியாளர்களை சம்பவம் நடைபெற்ற தொழிற்சாலையின் குறிப்பிட்ட பிரிவின் பொறுப்பாளர் அனைவரையும் முக்கா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றினார்.

மங்களூர் கெமிக்கல்ஸ் மற்றும் ஃபெர்ட்டிலைசர்ஸ் பணியாளர்களுடன் தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் மதிய வேளையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கசிவை அடைத்தனர்” என்று மாவட்ட தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

 

Exit mobile version