சாகும் வரை உண்ணாவிரதம் கருணாஸ் பரபரப்பு அறிவிப்பு…!!
நாளை நடக்க இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை விழாவில் 50 ஆண்டு கால கோரிக்கையாக இருக்கக்கூடிய தமிழ் சமூகத்தினுடைய கோரிக்கையை வலியுறுத்தி என்னுடைய சொந்த இடத்தில் முக்குலத்தோர் புலிப்படை அறக்கட்டளை சார்பாக அன்னதானமும் வழங்கவும்,
மதுரை விமான நிலையத்திற்கு தெய்வத்திருமகன் சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய பெயரை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அரை நூற்றாண்டு காலங்களாக வலியுறுத்தி இருக்கக்கூடிய நிலையில் நான் பாரத பிரதமர், மத்திய உள்துறைஅமைச்சர், கடந்த மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள், இதற்கு முன்பாக இருந்த முதலமைச்சர்கள், இன்றைய முதலமைச்சர் இவர்கள் அத்தனை பேருக்கும் நான் கோரிக்கையாக தொடர்ந்து சட்டமன்றத்திலும் வைத்துக் கொண்டிருக்க கூடிய ஒரு கோரிக்கையை முன்வைத்து நான் ஒரு அரங்கம் அமைத்து இருந்தேன்.
அந்த அரங்கத்தை எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கமுதியில் இருக்கக்கூடிய டிஎஸ்பி அவர்கள் தன்னிச்சையாக வருவாய்த்துறையை நிர்வாகிகள் உடைய யாருடைய ஆலோசனையும் இல்லாமல் அந்த ஒட்டுமொத்த அரங்கையும் அகற்றி இருக்கிறார் இதை வன்மையாக முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கண்டிப்பதோடு, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவருடைய பெயரை வைக்கக் கோரிய அந்த கோரிக்கையை தொடர்ந்து நாளை நான் என்னுடைய சொந்த இடத்தில் பசும்பொன்னில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக முடிவெடுத்திருக்கிறேன் இதை தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன் நன்றி வணக்கம்! கருணாஸ் நடிகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும், நன்றி…!!
இவ்வாறாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனர் நடிகர் கருணாஸ் குரல் பதிவு வெளியிட்டுள்ளார்.