Site icon ழகரம்

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம்! கடும் எதிர்ப்பு!  போராட்டத்தில் எதிர்க்கட்சிகள்…!!

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம்! கடும் எதிர்ப்பு!  போராட்டத்தில் எதிர்க்கட்சிகள்…!!

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம்! கடும் எதிர்ப்பு!  போராட்டத்தில் எதிர்க்கட்சிகள்…!!

சித்தராமைய்யா பேட்டி: சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே அரசு இதை செய்திருக்கிறது. மாநில அரசு மீது நாங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறோம். இதுபற்றி விவாதத்தை தவிர்க்கவே அரசு இவ்வாறு செயல்பட்டுள்ளது. இதை அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் என நான் சொல்ல மாட்டேன். சாவர்க்கரின் படத்தை திறந்த அரசு, அனைத்து தேசிய தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் படங்களையும் திறக்க வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பாஜக எதிர்ப்பு: சுதந்திரத்திற்காக போராடிய கட்சி காங்கிரஸ் என அக்கட்சி உரிமை கோருகிறது. ஆனால், அந்த காங்கிரஸ் வேறு; தற்போது உள்ள காங்கிரஸ் வேறு. இரண்டும் ஒன்றல்ல. தற்போது இருப்பது போலி. சட்டப்பேரவை வளாகத்தில் சாவர்க்கரின் படத்தை திறக்காமல் தாவூத் இப்ராஹிமின் படத்தையா திறக்க முடியும்? என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனிடையே, சட்டப்பேரவையில் வால்மீகி, பசவன்னா, கணக தாசா, பி.ஆர். அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டோரின் படங்களையும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சித்தராமைய்யா, சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

User Rating: Be the first one !
Exit mobile version