கள்ளக்குறிச்சி பள்ளி வாட்ச்மேன் கொலை செய்யப்பட்டாரா?? ஸ்ரீமதி தாயார் செல்வி சந்தேகம்! அடுக்கடுக்காக முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்!
- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், காவல்துறை சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீமதின் தாயார் ழகரம் வாய்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
பேட்டியில் ஸ்ரீமதி தாயார் எழுப்பிய சந்தேக கேள்விகள்:
- ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் நாங்கள் கேட்பது முதல் இரண்டு உடற்கூறு ஆய்வு அறிக்கைகள், இரண்டு உடற்கூறு ஆய்வு வீடியோ பதிவுகள் இவற்றை ஏன் தர மறுக்கிறார்கள்??
- Chemical Analysis Report, ஶ்ரீமதியின் கையெழுத்து ஆய்வு அறிக்கை ஏன் தரவில்லை??
- ஜிப்மர் ஆய்வு அறிக்கை கேட்கிறோம் ஏன் தர மறுக்கிறார்கள்??
- ஜெபஜீவ ப்ரியா எங்கே இருக்கிறார் என்பதை ஏன் மறைக்கிறார்கள்??
- உண்மையை வெளியே சொல்ல தயாரான கள்ளக்குறிச்சி பள்ளி வாட்ச்மேன் மண்ணாங்கட்டி கொலை செய்து விட்டதாக சொல்கிறார்கள்…??
- சக்தி பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரை ஒன்றுமே செய்ய முடியாது அவரிடம் அரசியல் பலம், பண பலம் இருப்பதாக காவல்துறையினர் மிரட்டியதாக செல்வி தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீமதி கீழே விழுந்த இடத்தை காவல்துறை பாதுகாக்காமல்! கொலை செய்த பள்ளி இடத்தை தான் பாதுகாக்கிறது. மாணவிகளின் விடுதியை பார்க்க அனுமதிக்காமல் காவல்துறையினர் மறுப்பது ஏன்…??
- இரண்டாவது மாடியில்தான் கொலை நடந்துள்ளது. பள்ளியின் படிக்கட்டில் ரத்தக்கரை இருந்ததாகவும், சுவரில் கைரேகை இருந்ததாகவும் அதனை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாகவும் ஸ்ரீமதின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
- சம்பவம் நடந்த அன்றே ரவிக்குமார் மகன்களை வெளியே காட்டாமல் ஒளித்து வைத்ததற்கான காரணம் என்ன?? அவர்கள்தான் ஸ்ரீமதியை கொலை செய்திருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
- பள்ளியின் உள்ளே நிறைய காண்டம் இருந்துள்ளது, பாலதண்டாயுதபாணி ID Card இருந்துள்ளது இவையெல்லாம் எப்படி வந்ததென்று ஏன் காவல்துறை கேள்வி எழுப்பவில்லை??
- வெடிமருந்தை கண்டுபிடித்து விட்டு, பின்னர் அதை கருஞ்சீரகம் என்று ஏன் சொல்ல வேண்டும்??
- ஸ்ரீமதி பெற்றோர் வருவதற்கு முன்பே மருத்துவமனையில் அனுமதித்தது ஏன்? மருத்துவர்கள் பள்ளி தரப்பை சந்தேகித்து கேள்வி எழுப்புவது ஏன்??
- முன்பே இறந்து வந்த குழந்தைக்கு இசிஜி எடுத்ததாக மருத்துவர்கள் பொய்யாக சொல்வது ஏன்??
- சிசிடிவி காட்சிகளில் ஸ்ரீமதி விழுவதுபோல, இல்லாத ஒன்றை அதுதான் ஸ்ரீமதி என்று காவல்துறையினர் நம்பவைக்க பொய் கூறியதாக செல்வி குற்றஞ்சாட்டியுள்ளார்.
- எங்களை கேள்வி கேட்கும் சிபிசிஐடி! பள்ளியில் இருக்கும் 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஏன் பார்க்கவில்லை? ஏன் ரவிக்குமாரை சிபிசிஐடி கேள்வி கேட்கவில்லை??
- இவ்வாறாக ஸ்ரீமதியின் தாயார் செல்வி காவல்துறை மீதும், பள்ளியின் மீதும், மருத்துவர்கள் மீதும், விசாரணை செய்துவரும் சிபிசிஐடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான மேலும் பல சந்தேகங்களையும் முன்வைத்துள்ளார்.
Srimathi Mother Selvi Full Interview: