கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை சோதனை முறையில் ஒரு மாதத்திற்கு திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!!
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.
- இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் போராட்டக்காராக்கள் அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்கினர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளி மூடப்பட்டது.
- இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால் பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பள்ளி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கின் இன்றைய விசாரணை முடிவில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதியளித்து நீதிபதி உத்தவிட்டுள்ளார். மேலும் ஒரு மாதத்திற்கு பிறகு அப்போதைய நிலைமையை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
- கனியாமூர் பள்ளியை திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி டிசம்பர் 5ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளார்.
- மேலும் கலவரத்தில் தீ வைக்கப்பட்டு சேதமடைந்த சி, டி பிளாக்குகள் மற்றும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஏ பிளாக்கில் உள்ள விடுதியின் 3வது தளத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுதியின் 3வது தளத்திற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
User Rating:
Be the first one !
Back to top button