- JEE 2023 நுழைவுத்தேர்வு எழுதுவதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்! தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தமமுக தலைவர் திரு. ஜான் பாண்டியன் கோரிக்கை!
- ஜேஇஇ (JEE) எனப்படும் ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் என்ற இந்த தேர்வானது, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள B.E., B.Tech. போன்ற படிப்பில் சேருவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
- 2020 ஆண்டு கொரோனா வைரஸ் இருந்த காலக்கட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் உள்ள நிலையில் மதிப்பெண் இல்லாததால் ஜேஇஇ (JEE) தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை தற்போது தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
- ஜேஇஇ (JEE) தேர்வு எழுதுவதற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என என்டிஏ (NTA) எனப்படும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
- எனவே தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் திரு. ஜான் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.