அரசியல்செய்திகள்

6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள்! ஜெய்பீம் 2.0 ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பகம்! விசிக தலைவர் திருமாவளவன்!

படிப்பகத்திற்காக கட்டப் போவது வெறும் கட்டிடம் அல்ல. அடுத்த தலைமுறையை இணைக்கும் பணி” 

அம்பேத்கரை இணைக்காமல், பேசாமல் காந்தியின் வரலாற்றை எழுத முடியாது. அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இனி இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது  விசிக தலைவர் திருமாவளவன்!

  • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணி விழாவை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகமான அம்பேத்கர் திடலில், ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடக்கம் மற்றும் ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பக இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாக்க வேண்டும்.ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடக்கம் மற்றும் ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பகம்! விசிக தலைவர் திருமாவளவன்!

  • நிகழ்ச்சியில் பேசிய அவர், ” ஊர் தோறும் அம்பேத்கர் படிப்பகம் என்பதை கொள்கை முழக்கமாக விசிக முன்னெடுத்துள்ளோம். ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாக்க வேண்டும். 1971-க்கு பிறகு இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் தான். நாடாளுமன்றத்தில் தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அம்பேத்கரின் கருத்துக்களை தினசரி மேற்கோள்காட்டி பேசுவார்கள். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உச்சரிக்கப்படும் தலைவரின் பெயர் அம்பேத்கரின் பெயர் தான்.

6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாக்க வேண்டும்.ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடக்கம் மற்றும் ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பகம்! விசிக தலைவர் திருமாவளவன்!

  • அம்பேத்கரை இணைக்காமல், பேசாமல் காந்தியின் வரலாற்றை எழுத முடியாது. அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இனி இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது என்ற வரலாற்று கட்டாயம் எழுந்துள்ளது. அம்பேத்கரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் இன்னும் முறையாக தொகுக்கப்பட வேண்டும், அதிகமான மக்களை சென்றடைய வேண்டும் என்ற செயல் திட்டத்தை உருவாக்கும் வகையில், ஜெய் பீம் 2.0 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகத்திற்காக 450 சதுர அடியில் கான்கிரேட் கட்டடங்களை கட்டவும், அம்பேத்கர், மார்க்ஸ் புத்தகங்களை 10 வயதுக்கு மேற்பட்டோர் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாக்க வேண்டும்.ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடக்கம் மற்றும் ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பகம்! விசிக தலைவர் திருமாவளவன்!

  • தொலைநோக்கு பார்வையுடன் ஜெய் பீம் 2.0 கனவு திட்டத்தை தொடங்கி உள்ளோம். ஜெய்பீம் அறக்கட்டளை மூலம் புத்தகங்களை பதிப்பு செய்வதும், தாய்மண் அறக்கட்டளை மூலம் அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்கவும் விசிகவினர் முழு பொறுப்பேற்க வேண்டும். மேலும் ஜனநாயகம், சமூகநீதி, தலித்தியம், விடுதலை, அரசியல் குறித்த அனைத்தும் பத்து வயது முதலே கற்க தொடங்க வேண்டும். இன்றைய தலைமுறையை கருத்தியல் ஆளுமை உள்ளவர்களாக மாற்ற வேண்டிய அறிமுகத்தை செயல் திட்டம் மூலம் கொடுக்க வேண்டும்.

6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாக்க வேண்டும்.ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடக்கம் மற்றும் ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பகம்! விசிக தலைவர் திருமாவளவன்!

  • ஒரு மனிதனை விழிப்படையச் செய்துவிட்டால் அவனே ஒரு ஆயுதக் கிடங்கு. விசிக தோழர்கள் முடியும் என நம்பினால் ஒரே ஆண்டில் நம்மால் 6000 அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்க முடியும். தினசரி என்னைத்தேடி 100 பேர் உதவி கேட்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் கட்சி தோழர்களுக்கு உதவும் எண்ணம் வரவில்லை. கட்சி தோழர்கள் நினைத்தாலே படிப்பகங்களை கட்டி முடிக்க முடியும். ஆனால் யாருக்கும் மனசு வராது. படிப்பகத்திற்காக கட்டப் போவது வெறும் கட்டிடம் அல்ல. அடுத்த தலைமுறையை இணைக்கும் பணி” என்று பேசினார்.

6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாக்க வேண்டும்.ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடக்கம் மற்றும் ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பகம்! விசிக தலைவர் திருமாவளவன்!

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button