Site icon ழகரம்

கோ.நம்மாழ்வார் பொன்மொழிகள்/ Nammalvar Quotes. இயற்கை வேளாண் விஞ்ஞானியின் சிந்தனை வரிகளின் தொகுப்பு…!!

கோ.நம்மாழ்வார் பொன்மொழிகள்/ Nammalvar Quotes. இயற்கை வேளாண் விஞ்ஞானியின் சிந்தனை வரிகளின் தொகுப்பு…!!

நம்மாழ்வார் பொன்மொழிகள்:

 

“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை…!!

 

“உண்ணா நோன்பு இருக்கும் போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன…!!

 

“நம்முடைய தேவைக்காக எப்பொழுது சமரசம் ஆகிறமோ அப்பொழுதுதான் தீயவற்றின் பாதையில் நாம் கால் வைக்க தொடங்குகிறோம்…!!

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என மனிதனை மட்டும் உயிராகப் பார்க்காமல் எல்லாவற்றையும் நம்மோடு அரவணைத்துக் கொள்வதே ஆன்மீக பார்வை…!!

 

“ஆன்மீக ரீதியில் பார்க்கும் போது மனிதர்களின் நலனை மட்டும் பார்த்தால் போதாது அது மிகவும் குறுக்கலான பார்வை…!!

 

“ஒவ்வொரு உயிரும் பிறவற்றை சார்ந்தே வாழ்கின்றது என்பதை ஆன்மீக ரீதியாகவே உணர முடியும். வெறும் அறிவியல் ரீதியாக மட்டுமே பார்த்தால்  அது அழிவினை நோக்கியே இட்டுச் செல்லும்…!!

“இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, நஞ்சுக்களை பயன்படுத்தாத விவசாயம் தான் இயற்கை விவசாயம்…!!

“இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்ய, கால்நடை வளர்ப்பு அவசியம். மர வளர்ப்பும் முக்கியமானது. பாரம்பரிய முறைகளே என்றும் நிலையானது…!!

“விரதமே மகத்தான மருத்துவம். இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை…!!

“உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வீரனை கோழையாக்குவதும் இல்லை. கோழையை வீரன் ஆக்குவதும் இல்லை. அவனை யார் என்று அவனுக்கு காட்டும்…!!

 

“பூச்சி தாக்காத பாரம்பரிய ரகங்களை பயிர் செய்ய வேண்டும். மண்ணை வளப்படுத்த வேண்டும். இன்றைக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது…!!

“பருவநிலை மாற்றம்தான் அதை சரி செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக காடுகளை வளர்க்க வேண்டும்…!!

“நஞ்சில்லாத உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறிவிடுவார்கள்…!!

 

“50 வயது வரை உடம்பு தான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது…!!

 

“இயற்கை விவசாயம் என்பதன் அடிப்படை இயற்கையுடன் இணைந்த உணவு உற்பத்தி…!!

“மனிதர்களை சுற்றியுள்ள மரங்கள்,செடிகள், கொடிகள், கால்நடைகள் மற்றும் பறவைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சூழல் இந்த உலகில் இருக்க வேண்டும்…!!

 

“பசி, தாகம்‌, சோர்வு என உடல்‌ சரியான மிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம்‌ இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம்‌ கடைப்பிடித்தாலே எந்தவிதமான சிக்கலும்‌ வராது…!!

 

“இன்றைக்கு பல்வேறு பிரச்னைகளுக்கும்‌ அடிப்படையாக இருக்கிறது, பருவநிலை மாற்றம்தான்‌. அதைச்‌ சரிசெய்யணும்னா, கண்டிப்பாக காடுகளை வளர்க்கணும்…!!

“இயற்கை  விவசாயம்‌ என்பது பயிர்‌ சுழற்சி முறை மூலம்‌ பல தானிய சாகுபடி செய்வது…!!

“ஒற்றை நாற்று நடவு அதிக மகசூல்‌ தரும்‌. பஞ்சகவ்யா, நவகவ்யா, மூலிகை கரைசல்‌ போன்றவை பயிர்‌ பாதுகாப்புக்கு அவசியம்‌…!!

“மாப்பிள்ளைச்‌ சம்பான்னு ஒரு ரகம்‌; சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின்‌ போடவே தேவையில்லை…!!

“விவசாயிகள்‌ இரசாயன உரம்‌, பூச்சிகொல்லி நஞ்சுகளைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. அதற்கு பதிலாக இயற்கை உரங்களையும்‌, மூலிகை பூச்சி விரட்டிகளையும்‌ பயன்படுத்த வேண்டும்‌…!!

“இயற்கை நமக்குக்‌ கொடுத்த அருட்கொடை மூலிகைகள்‌. நாம்‌ பயிர்‌ செய்யாமலேயே நமக்கான  உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது…!!

“பூச்சி தாக்காத பாரம்பரிய ரகங்களைப்‌ பயிர்செய்ய வேண்டும்‌.  மண்ணை வளப்படுத்த வேண்டும்‌…!!

“இயற்கை விவசாயம்‌ என்பது ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றி முதலியவற்றின்‌ எருக்களைப்‌ பயன்படுத்துவது…!!

“அரசாங்க வேலை பார்க்கறவங்களுக்குக்‌ கிடைக்குற பென்ஷன்‌ (ஓய்வூதியம்‌) மாதிரி… மரங்கள்‌ வளர்ந்து நம்மோட கடைசிக்‌ காலத்துக்குப்‌ பென்ஷன்‌ கொடுக்கும்‌…!!

“இயற்கை விவசாயம்‌ என்பது பசுந்தாள்‌ உரம்‌ பயன்படுத்துவது…!!

“இயற்கை விவசாயம்‌ என்பது இரசாயன உரம்‌, பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, நஞ்சுகளைப்‌ பயன்படுத்தாத விவசாயம்‌…!!

“இயற்கை விவசாயத்தை சிறப்பாகச்‌ செய்ய, கால்நடை வளர்ப்பு அவசியம்‌. மர வளர்ப்பும்‌ முக்கியமானது…!!

“தமிழ்நாட்டுக்கு பருவ மழை இனி கிடையாது, புயல்‌ மழைதான்‌ வரும்‌. நம்‌ வனங்களையும்‌, மரங்களையும்‌ அழித்ததன்‌ விளைவு…!!

“தீதும்‌, நன்றும்‌ பிறர்‌ தர வாரா’ என்கிற வரி நம்‌ உடலுக்கும்‌ உள்ளத்துக்கும்‌ ஒருசேர வழிகாட்டக்கூடியது.  அந்த வரிகளை மனதில்‌ ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக்‌ கற்றுக்‌ கொண்டால்‌ வாழ்வின்‌ சிறப்புக்குக்‌ குறைவு இருக்காது…!!

User Rating: 4.13 ( 2 votes)
Exit mobile version