Site icon ழகரம்

சிறையில் உள்ள ஹரி நாடார் மீண்டும் கைது….!

‘ஃப்ரெண்ட்ஸ்’ படம் மூலம்பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார்.

2020 ஜூலையில் மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமியிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் வாங்கினார்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விஜயலட்சுமி உடல் நலம் சரியாகாத நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றி விட்டதாக தர்ணாவில் ஈடுபட்டார். சீமானுக்காக ஹரிநாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும் எனவும் விஜயலட்சுமி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, திருவான்மியூர் போலீஸார் தற்போது மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். வழக்கு ஒன்றில் கைதாகி,பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை, விஜயலட்சுமி வழக்கில் கைது செய்ய அனுமதிக்கக் கோரி, பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் அனுப்பினர்.

பெங்களூரு நீதிமன்றம் ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கியது. இதனையடுத்து திருவான்மியூர் போலீசார் பெங்களூருவிற்கு விரைந்து சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரி நாடாரை பெங்களூர் போலீசார் உதவியோடு சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஹரி நாடாரை திருவான்மியூர் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

 

Exit mobile version