Site icon ழகரம்

ஆளுநர் ஆர்.என்.ஆர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்……!

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வணக்கம் என்று தமிழில் கூறியபடி தமது உரையை ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து உரையாற்றினார்.

“கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு அந்த சூழலை சிறப்பாக கையாண்டது. தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது” என்று ஆளுநர் பேசியுள்ளார்.

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் அவர் பங்கேற்று உரையாற்றும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இது.

இந்த நிலையில் ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, விசிக ஆகிய இரு கட்சிகளும் இன்று வெளிநடப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version