நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நீட் விலக்கு எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்க ஆளுநரே அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.ஆனால், தமிழ்நாடு ஆளுநர் வேண்டுமென்றே நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். நீட் விலக்கு மசோதா சட்டம் ஆகாமல் இருக்க மாநில ஆளுநர் ஆர்.என். ரவியே காரணம் என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.